தமிழ்ச் சமூகத்தை ஒன்றிணைத்தல்

கற்பித்தலுக்கு கூடுதலாக, எங்கள் மாணவர்களை சமூக நிகழ்வுகளில் பங்கேற்க ஊக்குவிக்கிறோம், அது பாராயணம் போட்டி, பேச்சுப் போட்டி, கலாச்சார நிகழ்வுகள் போன்றவை. மேலும் சமூகத்துடன் இணைய அவர்களுக்கு உதவுகிறோம். இதன்மூலம் குழந்தைகள் தமிழ் கலாச்சாரம் மற்றும் முக்கியத்துவத்தை அறிந்து, அடுத்த தலைமுறைக்கு கடத்துவார்கள்.

இலக்கியம்

மொழியுடன் வரும் வளங்களான இலக்கியங்களையும் வரலாற்றையும் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.சில இலக்கியங்களில் திருக்குறள், தேவாரம், திருப்புகழ் மற்றும் பிற சங்க இலக்கியங்களும் அடங்கும்.

கலாச்சாரம்

பாடசாலையில் கலைகளை கற்பிப்பதன் மூலமும், எங்கள் விழாக்களில் மற்றும் பல்வேறு தமிழ் சமூகம்/தொண்டு நிறுவனங்கள் நடத்தும் நடனம், நாடகம் போன்ற கலாச்சார நிகழ்வுகளில் குழந்தைகள் பங்கேற்க ஒரு தளத்தை நாங்கள் வழங்குகிறோம். இதன் மூலம் குழந்தைகள் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகளைப் பற்றியும், கலாச்சாரத்தைப் பற்றியும் தெரிந்து கொள்கிறார்கள்.